hanifa video

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

குற்றாலத்தில் நாவல்பழம் விற்பனை அமோகம் | குற்றாலத்தில் நாவல்பழம் விற்பனை அமோகம் Dinamalar

குற்றாலத்தில் நாவல்பழம் விற்பனை அமோகம் | குற்றாலத்தில் நாவல்பழம் விற்பனை அமோகம் Dinamalar: ஆகஸ்ட் 19,2011,01:15 IST
குற்றாலம்:குற்றாலத்தில் அதிகளவில் நாவல்பழம் விற்பனை செய்யப்படுகிறது.குற்றாலம் சீசன் என்றாலே அருவிகளில் தண்ணீர் கொட்டுவதும், அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வதும்தான் அனைவரின் நினைவுக்கு வரும். மேலும் குற்றால சீசன் காலத்தில் மட்டும் இங்கு விற்பனைக்கு வரும் பழவகைகளை சுற்றுலா பயணிகள் மறக்க மாட்டார்கள். மங்குஸ்தான், முட்டை பழம், ரம்டான், பன்னீர் கொய்யா, துரியன் உள்ளிட்ட பழங்கள் மலைப் பகுதியில் மட்டும் விளையக்கூடியது. இவற்றில் குற்றாலம் மலைப் பகுதியில் விளையும் மங்குஸ்தான், ரம்டான் பழ வகைகளுக்கு தனி சுவை உள்ளது. இதனால் இவற்றின் விற்பனை சீசன் காலத்தில் அமோகமாக இருக்கும்.

இந்த வரிசையில் நாவல் பழமும் இடம் பெற்றுள்ளது. குற்றாலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் நாவல் பழம் தனி சுவை இருப்பதோடு, அளவிலும் சற்று பெரியதாக இருக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். சர்க்கரை கொல்லி மருந்தாக இது பயன்படுவதால் இதற்கு எப்போதும் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. குற்றாலத்தில் இதன் விற்பனை இப்போது அமோகமாக இருக்கிறது. நாவல் பழம் கிலோவிற்கு 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் நாவல் பழத்தை வாங்கி சாப்பிட்டு மகிழ்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக