hanifa video

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

திருநெல்வேலி : செங்கோட்டை வட்டாரத்தில் தோட்டக்கலைதுறை சார்பில் 50சதவீத மானிய விலையில் காய்கறி மற்றும் பழ மரக்கன்று விதைகள் வினியோகம் செய்யப்படுகிறது.இது குறித்து செங்கோட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது;ஆடிப்பட்ட காய்கறி சாகுபடிக்காக தோட்டக்கலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் காய்கறி விதைகள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.முளைக்கீரையாகவும், தண்டுக்கீரையாகவும் பயிரிட ஏற்ற கோ 2 கீரை விதைகளும், கோ 1 பூசணி விதைகளும் 50 சதவீத மான்ய விலையில் செங்கோட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.இதுதவிர கொய்யா, சப்போட்டா, ஒட்டு பழ மரக்கன்றுகள் 50 சதவீத மானிய விலையில் விரைவில் வினியோகம் செய்யப்படவுள்ளன. எனவே கொய்யா, சப்போட்டா கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் தேவையை செங்கோட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.காய்கறி விதைகள், பழமரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் செங்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.இத்தகலை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக