hanifa video

வியாழன், 10 ஜூன், 2010

விவாகரத்து பெறுவது இனி சுலபம்


புதுடெல்லி : விவாகரத்து பெறுவதை எளிதாக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தீராத தொற்று நோய், கள்ளத் தொடர்பு, ஆண்மைக் குறைவு, மனநிலை பாதிப்பு, மதமாற்றம் நீண்ட காலம் கூடி வாழ முடியாத சூழல் போன்ற காரணங்களை அடிப்படையாக வைத்து தான் இப்போதுள்ள சட்டங்களின்படி கணவன்&மனைவி இடையே விவாகரத்து வழங்கப்படுகிறது.
கணவன், மனைவி இடையே சில சமயங்களில் மணவாழ்க்கை இனிக்காமல் கசந்து விடுகிறது. கருத்துவேறுபாடு, மனக்கசப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற, மீண்டும் சேர முடியாத அளவுக்கு பிரிவு ஏற்படுவது முக்கிய காரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
இவற்றையெல்லாம் காரணம் காட்டி இப்போதுள்ள சட்டப்படி விவாகரத்து பெற முடிவதில்லை. இதையும் அடிப்படையாக வைத்து விவாகரத்து பெறும் வகையில் திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
ர் கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு, அல்லது எளிதில் கோபப்படும் மனோபாவத்தால் அடிக்கடி சச்சரவு, சித்ரவதைக்கு ஆளானாலும் விவாகரத்து செய்ய அனுமதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதன்படி 2010ம் ஆண்டு திருமணச் சட்டத்தில் மேலும் திருத்தங்கள் செய்ய அனுமதிக்கப்படுகிறது. 1955 இந்து திருமணச் சட்டம் மற்றும் சிறப்பு திருமணச் சட்டம் 1954 ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அவை திருமண திருத்தச் சட்டத்தில் சேர்க்கப்படும்.
ர் கணவன் அல்லது மனைவி குடும்பத்தில் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டால் அதை காரணமாகக் கொண்டு இருவரும் ஒன்றுபட்டு நீதிமன்றங்களுக்கு வருவதில்லை. யாராவது ஒருவர் நீதிமன்றத்தை அணுக மறுப்பர். இதனால் விவாகரத்து பெறும் முயற்சி முடிவு பெறாமல் போகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காகவும், விவாகரத்து நடைமுறைகளை எளிதாக்குவதற்காகவும் சட்டக் கமிஷனின் 217வது அறிக்கைஅடிப்படையில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.
ர் எனினும் இந்து திருமணச் சட்டம் 13&பி மற்றும் 28வது பிரிவின்படி கணவன், மனைவி இருவரது சம்மதத்தின் பேரில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டு, 6 மாதம் வரை வாபஸ் பெறப்படவில்லை என்றால் நீதிமன்றம் விசாரணை நடத்தி 18 மாதங்களுக்குள் விவாகரத்து வழங்கலாம்.
ர் இது போன்ற நிகழ்வுகளில் சில சமயம் கணவன், அல்லது மனைவி நீதிமன்றத்துக்கு வர மறுப்பர். இதன் காரணமாக விவாகரத்து வழக்கு முடிவு பெறாமல் நீண்டு கொண்டே போகும். இதனால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொள்ளப்பட்டு இருப்பதாக அம்பிகா சோனி மேலும் கூறினார்