hanifa video

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

ராமநாதபுரம் : திருமணம் முடிந்த 10வது நாளில், மலேசியா சென்ற கணவர் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், "இந்த எண் உபயோகத்தில் இல்லை ' என, ஏழு ஆண்டுகளாக "மிமிக்ரி' செய்து வருவதாக, மனைவி புகார் செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கலையூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி(24). இவருக்கும், அபிராமம் அருகே பொட்டகவயலை சேர்ந்த ராஜிவ்காந்தி(28) என்பவருக்கும் கடந்த 2004ல் திருமணம் முடிந்தது. கொத்தனார் வேலை செய்து வந்த ராஜிவ் காந்திக்கு, வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக தனது திருமணத்திற்கு, நகைக்கு பதிலாக வெளிநாடு செல்ல தேவையான பணத்தை மனைவி வீட்டாரிடம் பெற்றுக் கொண்டார். திருமணம் முடிந்த 10 வது நாளில் மலேசியாவுக்கு சென்றார். வேலைக்கு சேர்ந்த பின், போன் மூலம் தகவல் தெரிவித்தவர், அதன் பின் தொடர்பு கொள்ளவில்லை.விஜயலட்சுமி போன் செய்த போதெல்லாம், "இந்த எண் உபயோகத்தில் இல்லை' என, மிமிக்ரி செய்தபடி இருந்தார். விஜயலட்சுமியின் பெற்றோர், மலேசியாவில் உள்ள உறவினர் வேல்முருகனை தொடர்பு கொண்டு, தங்கள் மருமகனின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்தனர். அவர் சென்று பார்த்த போது, ""எனது பெற்றோர் என் பேச்சை கேட்காமல் திருமணம் செய்து வைத்தனர். எனக்கு இதில் உடன்பாடில்லை, நான் இந்தியா திரும்ப மாட்டேன்,'' எனக் கூறி விட்டார். அதை அறிந்து விஜயலட்சுமி தரப்பினர் , நேற்று கலெக்டர் ஹரிஹரனிடம் புகார் செய்தனர்.

விஜயலட்சுமி கூறியதாவது:திருமணம் முடிந்த கையோடு மலேசியா சென்று விட்டார். ஏழு ஆண்டுகளாக போன் செய்தாலும்,"மிமிக்ரி' செய்து புறக்கணிக்கிறார். அவரது பெற்றோர் கூறினாலும் அலட்சியப்படுத்துகிறார். அவருக்கு புத்தி சொல்லி என்னிடம் சேர்த்து வைக்க மனு செய்துள்ளேன்.இவ்வாறு விஜயலட்சுமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக