
நான் ஒரு டிரைவர். சமீபத்தில் எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இருதய மருத்து வரை சந்தித்து பரிசோதனையில் நலமாக இருக்கிறேன் என்று தெரிந்தும், சில நேரங்களில் நெஞ்சு படபடப்பும், சின்ன வலியும் ஏற்படுகிறது. ஒரு கொடூர சாலை விபத்தை பார்த்ததிலிருந்து தான் இதுபோன்று உள்ளது. நான் இனி என்ன செய்ய வேண்டும். (செந்தில், சிவானந்தா காலனி, கோவை)
உங்களுக்கு காரணமற்ற பயம் அந்த கோர விபத்தை பார்த்ததிலிருந்துதான். காரணமுள்ள பயம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும். காரணமற்ற பயம், குழப்பத்தை உண்டு பண்ணும். ஒவ்வொரு விபத்தை உங்கள் மனதில் முன்பதிவு செய்யப்பட்ட மனப்பதிவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு காரணமற்ற பயத்தால்தான் தலைவலி, நெஞ்சுவலி, விரக்தி வார்த்தைகள், திடீர் கோபம் வருகிறது. நெஞ்சுவலிக்கு நீங்கள் இருதய மருத்துவரிடம் பரிசோதனை செய்வது நலம் என்று தெரிவதால், உங்கள் மனக் குழப்பத்தை நீக்க முயற்சியுங்கள். விபத்துக்களை பார்க்கும்போது அதை மறக்க முயற்சிக்காமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். அதுவே விபத்து எண்ணத்தை மறக்கடிக்கச் செய்யும். இதுபோன்ற நேரத்தில் எண்ணங்களை மனதுக்குள் வைத்து குழப்பிக்கொள்ளாமல் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது நல்லது.
- Dr. M.J.K. முஹையுத்தீன்
உளவியல் ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர்
லைஃப் கிளினிக் பவுண்டேசன், கோவை.
93600 53930
- X Ray ராஜ்குமார்
நான் உடற்பயிற்சி சாலையில் அதிகப்பளுவை பல்லைக் கடித்துக் கொண்டு தூக்குவதால், எனது பல்லில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசல் (CRAC) ஏற்பட்ட பல்லில் அடிக்கடி கூசுகிறது. நான் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் (ராஜா, ராமநாதபுரம்)
முதலில் பல்லை ஆராய்ந்து விரிசல் (CRAC) இருக்கிறதா என்று உறுதி செய்யப்பட்ட பின்பு COMPOSIT FILLING மூலம் ஒட்ட வைக்கலாம்.
அந்த பல்லில் வலி ஏதேனும் இருந்தால் X RAY எடுத்துப் பார்த்து பல்வேர் பாதிப்பு (Root Infection) இருக்கும் பட்சத்தில் வேர் சிகிச்சை (Root Canal) செய்து முடித்து பல்லுக்கு தொப்பி (CROWN) செய்து கொள்ளலாம். அதன் மூலம் பல்லின் வலி மற்றும் கூச்சம் குறைந்து பல் பழைய உறுதியான நிலைக்கு வரும்.
மேலும் உடற்பயிற்சி சாலையில் அதிகப்பளுவை தூக்கும்போது பல் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு வகையான ரப்பரால் தயாரிக்கப்பட்ட பல் பாதுகாப்பு கவசம் (Tooth Gourd) அணிவது பாதுகாப்பானது